ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பேருந்தில் வழித்தடம் மாறி ஏறிய பயணியை டிரைவர் மற்றும் நடத்துநர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே விராளிகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து இரவு பணி முடிந்து அந்தியூர் அருகே உள்ள மூலக்கடை பகுதிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்த பேருந்தில் அவசரத்தில் நடத்துனரிடம் வழித்தடம் குறித்து கேட்டு விட்டு ஏறி உள்ளார்.
இதில் நடத்துனர் பேருந்து ஏறும்போது மறுப்பு தெரிவிக்காமல் ஏறும்படி கூறியுள்ளார். இதையடுத்து, பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பயணி சந்தோஷ் குமார் நடத்துனரிடம் பயண சீட்டு பெறுவதற்காக ஊர் பெயரை சொன்னபோது அந்த வழித்தடத்தில் பேருந்து செல்லாது, பேருந்தில் வைக்கப்பட்ட பெயர் பலகையை பார்த்து ஏற வேண்டியதுதானே என்று கூறி தகாத வார்த்தைகளில் ஓட்டுனரும், நடத்துனரும் சேர்ந்து தரக்குறைவாக பேசி உள்ளனர்.
ஒரு கட்டத்தில் பயணி சந்தோஷ்குமார் மற்றும் ஓட்டுநர், நடத்துனர் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பேருந்து ஓட்டுனர் மாதேஷ்வரன் என்பவர் மிகவும் கீழ்த்தரமான முறையில் பயணியிடம் நடந்து கொண்டுள்ளார். இதையடுத்து, சந்தோஷ்குமார் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இருவரும் தரக்குறைவாக பேசியதாக அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அந்தியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பயணி அளித்த புகாரின்பேரில் உரிய விசாரணை மேற்கொண்டு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சந்தோஷ் குமார் மற்றும் ஓட்டுநர் மாதேஷ் நடத்துனர் மூவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.