சாலையில் திடீரென அரசுப் பேருந்தின் டயர் கழன்றதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்.. வைரலாகும் வீடியோ..!!

Author: Babu Lakshmanan
25 March 2023, 2:14 pm

வேடசந்தூர் அருகே ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன் கோட்டையில் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூரை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வந்தனர்.

அப்போது, பேருந்து டயர் கழண்டு வருவதை கண்ட ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு அரசு பேருந்தை நிறுத்தி இறங்கிப் பார்த்தார். அந்த சமயம் அவர் அச்சப்பட்டதை போலவே, பேருந்தின் டயர் கழன்று இருந்தது. ஒருவேளை ஓட்டுநர் இதனை கவனிக்காமல் பேருந்தை இயக்கியிருந்தால், பெரும் விபத்து நிகழ்ந்திருக்கும் அபாயம் இருந்திருக்கும்.

இதனிடையே, பேருந்து டயர் கழன்ற நிகழ்வை அருகே காரில் பயணித்த ஒருவர், வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளமும் முழுவதும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஓட்டுநர் சுதாரித்தால் 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் காயங்களில் ஏற்படாமல் தப்பிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0