அமைச்சரவையை தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம்… சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமனம்… தமிழக அரசு உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
13 May 2023, 6:13 pm

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளை அண்மையில் நிறைவு செய்து விட்டது. இதையடுத்து, எடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். மேலும், திமுக எம்பி டிஆர் பாலுவின் மகனும், கட்சி நிர்வாகியுமான டிஆர்பி ராஜாவை தொழில்துறை அமைச்சராக நியமனம் செய்தார். தொடர்ந்து, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோரின் துறைகளும் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், உள்துறை செயலாளராக நியமனம்
முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றம்
நிதித்துறை செயலாளராக இருக்கும் முருகானந்தம், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக மாற்றம்
சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி சுகாதாரத்துறை செயலாளராக நியமனம்
கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்துறை செயலாளராக இருந்த பணீந்திர செட்டி போக்குவரத்துத்துறை செயலராக மாற்றம்

போக்குவரத்துத்துறை செயலர் கோபால், கண்காணிப்பு மற்றும் நிர்வாக சீரமைப்பு ஆணையராக நியமனம்
சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன், பொதுப்பணித்துறைச் செயலாளராக மாற்றம்
கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக இருக்கும் ஜெ. ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 439

    0

    0