4வது நாளாக நீடிக்கும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் ; 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி!!

Author: Babu Lakshmanan
30 December 2022, 12:37 pm

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 4வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சமவேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போதைய திமுக அரசு தங்களின் கோரிக்கை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27ம் தேதி முதல் உண்ணாவிரதப்போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர்.

இதையடுத்து, போராட்டக்காரர்களுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதனிடையே, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காக்கர் லா உஷா, போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையிலும் எந்தவித உடன்பாடும் எட்டவில்லை. இதனால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. எனவே, போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

அதன்படி, ஆசிரியர்கள் சங்கத்தினர் தங்களின் குடும்பத்தினருடன் 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று வரை போராட்டத்தில் நேற்று வரை 69 ஆசிரியர்-ஆசிரியைகள் மயக்கம் அடைந்தனர். இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, கல்வித்துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 447

    0

    0