ரயில் தண்டவாளத்தில் கிடந்த அமைச்சரின் அண்ணன் மகளின் சடலம்.. அதிர்ச்சியில் திமுக வட்டாரங்கள்..!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 4:34 pm

வேலூர் ; தமிழக அமைச்சரின் அண்ணன் மகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் மறைந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆகிறது. துரை மகாலிங்கத்தின் மகள் பாரதி (55). இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார். பாரதியின் கணவர் ராஜ்குமார் காட்பாடி சிக்ல்மில் பகுதியில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் லத்தேரி அருகே பாரதி ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் பாரதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தற்கொலைக்கான காரணம் கணவருடன் சண்டையா? அல்லது வேறேதேனும் குடும்ப பிரச்சனையா? என்ற கோணத்தில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துரைமுருகனின் அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!