இந்திய பாராலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராக Er.சந்திரசேகர் தேர்வு ; பல்வேறு தரப்பினர் வாழ்த்து…!!
Author: Babu Lakshmanan9 March 2024, 5:02 pm
தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் Er.சந்திரசேகர் தலைமையின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம், கிராமப்புற மாற்றுத்திறனாளி இளைஞர்களை தடகள விளையாட்டு வீரர்களாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்து வருகிறது.
அவரது செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவும், பாராட்டுகளும் குவிந்தன. அவரது தலைமையின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் வீரர்கள், பாரிஸ் மற்றும் பிரான்ஸில் நடைபெற்ற உலக பாராலிம்பிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று 17வது இடத்தை பிடித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த திறமையான வீரர்களின் பெயர்களை சாதனை புத்தகங்களில் இடம் பெற உறுதி செய்ய தமிழ்நாடு பாராலிம்பிக் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் தீவிரமாக செயல்பட்டு வருகிறது என Er. சந்திரசேகர் ஏற்கனவே கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் Er.சந்திரசேகர், இந்திய பாராலிம்பிக் சங்கத்தின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்தவர் முதல் முறையாக தேசிய அளவில் பாரா ஒலிம்பிக் கமிட்டியில் துணைத் தலைவராக தேர்வாகி இருப்பது இதுவே முதல் முறை.
இதன் மூலமாக தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள்
தேசிய அளவில் சர்வதேச அளவிலும் தங்களது திறமைகளை காட்ட வாய்ப்பு உருவாகி உள்ளது.
உரிய பயிற்சி மற்றும் தேவையான வசதிகளை செய்து கொடுத்து தமிழக வீரர்களை சர்வதேச போட்டிகளுக்கு தயார் செய்ய தேவையான வசதிகள் செய்து தரப்படும் என இன்ஜினியர் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார்.