ஒரே நாளில் தக்காளி விலை கிடுகிடுவென ரூபாய் 100 ஐத் தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் வரவு கம்மியாக இருப்பதால் வியாபாரிகள் போதிய அளவு தக்காளி இல்லாமல் திணறி வருகின்றனர். தக்காளியின் உற்பத்தியும் குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தென்மேற்கு பருவக்காற்றினால் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இலைகள்,பூக்கள் உதிர்ந்து தக்காளி காய்ப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் பூச்சி தாக்கத்தினாலும் தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி,விவசாயிகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை, தேனி போன்ற மாவட்டங்களில் தற்போது தக்காளி ஒரு கிலோ 110 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்கு இந்த விலை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விளைவுகள் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.