வலிமையான இந்தியாவில் பலவீனமான பிரதமர்… தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது ; சபாநாயகர் அப்பாவு பரபர பேச்சு..!!

Author: Babu Lakshmanan
12 August 2023, 4:49 pm

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால் நாங்குநேரி சம்பவத்திற்கு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அல்போன்சா அக்காடமி சார்பில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சட்டமன்ற சபாநாயகர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- நாங்குநேரி பள்ளி மாணவன் வெட்டப்பட்ட சம்பவம் வேதனைக்குரியது. இது தொடர்பாக தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது போன்ற மோதல்களுக்கு சமூக அமைப்புகளே காரணம். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடந்து கொண்டிருப்பதால் இதுபோன்ற மோதல்களை அனுமதிக்க முடியாது.

இதற்கு தமிழக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும். மணிப்பூரில் நடந்த சம்பவத்திற்கும் இதற்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. இலங்கையில் சீனாவின் உளவு கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வலிமையான இந்தியாவில் ஒரு பலவீனமான பிரதமர் செயல்பட்டு வருகிறார்.

மாமல்லபுரத்தில் சீனப் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்துக் கொண்ட நிகழ்ச்சி நடந்த பின்னர் 10 ராணுவ வீரர்கள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை புரியும் பிரதமர் நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.

  • Irunga Bai dialogue trending சோசியல் மீடியாவை அலறவிட்ட”இருங்க பாய்”…குரலுக்கு சொந்தக்காரர் இவர் தானா…!