நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு : 4 பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 5:46 pm

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு : 4 பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் உள்ளது நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பணம் பதுக்கிவைக்கப்பட்டுளள்தாக வருமான வரித்துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர், நேற்று முன்தினம் குவிந்தனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது.

பின்னர் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வரவழைக்கப்பட்டு, அலுவலகத்தை திறந்து சோதனையை மேற்கொண்டனர்.

அனைத்து அறைகளையும் சோதனை செய்து, ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.

பிற்பகல் தொடங்கிய இந்த சோதனையானது நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. பின்னர் 4 பைகளுடன் வருமான வரித்துறையினர் வெளியேறினர். அந்த பைகளில் பணம் இருந்ததாகவும் தகவல் வெளியபாகியுள்ளது.

அலுவலகத்தை சுற்றியுள்ள மெக்கானிக் கடை, கூரியர் நிறுவனம், ஜெராக்ஸ் கடை உட்பட 7 கடைகள் மற்றும் 2 வடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி சில முக்கிய குறிப்புகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…