தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியது மொத்த கொரோனா பாதிப்பு… இன்று ஒரே நாளில் 195 பேருக்கு தொற்று..!!

Author: Babu Lakshmanan
8 June 2022, 8:29 pm

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 195 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 144 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,021 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 101 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக, சென்னையில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 33 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 30 பேருக்கும், செங்கல்பட்டில் புதிதாக 23 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

  • GV Prakash Kingston Trailer Launch ஜிவி தமிழ் சினிமாவின் பொக்கிஷம்…அனிருத் தாக்கப்பட்டாரா..பிரபல தயாரிப்பாளர் பேச்சு.!