பொதுமக்களே உஷார்… இன்று யாரும் வெளியே போக வேண்டாம்… எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்..!
Author: Babu Lakshmanan2 May 2024, 9:41 am
இன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். ஏப்ரல் மாதத்திலேயே இப்படி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மே மாத அக்னி நட்சத்திரம் தொடங்கினால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெயிலின் தாக்கத்தை பொறுத்து அதிக வெப்பத்திற்கான மஞ்சள் எச்சரிக்கை மற்றும் சிவப்பு எச்சரிக்கைகளை இந்திய வானிலை மையம் விடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டிலும் அவ்வப்போது சில மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ‘அப்பா என்னா வெயிலுடா’… போதையில் ATM ரூமின் ஏசியில் படுத்து தூங்கிய போதை ஆசாமி ; வைரலாகும் வீடியோ!!
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ” இன்றைய தினத்தை விட நாளைய தினம் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால் இதுபோன்ற வெப்பநாட்களுக்கு பிறகு எப்போது ஒரு குட்நியூஸ் இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள்ள மாவட்டங்களில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.