தவெக மாநாட்டு மூலம் தமிழ்நாடு தளபதி நாடாக மாறும் : அடித்து சொல்லும் பெண் பிரமுகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2024, 1:31 pm

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் முதல் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்காக பல்வேறு ஆலோசனைகளை பொதுச் செயலாளர் ஆனந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தவெக கழகத்தின் சார்பில் மாநாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மணி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருகை தந்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு அக்கட்சியினர் ஆளுயுற மாலை அணிவித்து தலையில் கிரீடம் சூட்டி ரூபாய் நோட்டுகளை மாலையாக போட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையும் படியுங்க: உங்க ஸ்கூல்ல வெடிகுண்டு வெடிக்கப் போகுது : பதறிய ஆசிரியர்கள்.. கோவை தனியார் பள்ளியில் சோதனை!

இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமை தாங்கினார். இதில் தமிழக வெற்றி கழகத்தின் பல்வேறு பிரிவுகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கூறுகையில், மாநாட்டிற்கு வருகை தரும் அனைவரிடமும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வாங்கப்பட்டு மாநாட்டில் அனைவரும் பத்திரமாக சென்று கலந்து விட்டு திரும்பும் படியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் தனித்தனியாக தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என்ற அவர், தளபதியின் மாநாடு தளபதியின் நாடாக தமிழ்நாடு அமையும் என அவர் தெரிவித்தார்.

  • Salman Khan security issue என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!