ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: தனியார் நிகழ்ச்சியில் சர்ச்சை..தமிழ் ஆர்வலர்கள் அதிருப்தி..!!

Author: Rajesh
27 April 2022, 10:56 pm

கன்னியாகுமரி: குமரியில் நடைபெற்ற ஆளுநரின் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.


கன்னியாகுமரியில் ஸ்டெல்லா மேரிஸ் என்னும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நவீன விவசாய கருத்தரங்கு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பேசினார்.

இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதமே பாடப்பட்டது. அதேபோல் நிகழ்ச்சி நிறைவிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஒரே நிகழ்ச்சியில் இரண்டு முறை தேசிய கீதம் பாடப்பட்டும் தமிழ் தாய் வாழ்த்து பாடப் படாதது ஏன் என நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது நிகழ்ச்சி நிரல் முழுவதுமே கவர்னர் அலுவலக அதிகாரிகள் தான் முடிவு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

இதனால் எங்களால் அதில் எதுவும் மாற்றம் செய்ய இயலாமல் போனது என்று அவர்கள் கூறினர். தமிழகத்தில் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியும் ஒரு ஆளுநர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1195

    0

    0