கவலைக்கிடம்.!நெஞ்சுவலியால் மைதானத்தில் சரிந்த முன்னாள் கேப்டன்..!
Author: Selvan24 March 2025, 7:11 pm
மாரடைப்பால் துடித்த தமீம் இக்பால்!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தமீம் இக்பால் திடீரென மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவரது உடல்நிலை குறித்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகம் பெரும் கவலையில் உள்ளது.
இதையும் படியுங்க: விராட்கோலிக்கு END CARD…’ருத்ராஜ் கெய்க்வாட்’ போடும் மாஸ்டர் பிளான்.!
சர்வேதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது டாக்கா பிரீமியர் லீக் என்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார்.முஹம்மதின் ஸ்போட்டிங் கிளப் அணிக்கு கேப்டனாக பீல்டிங் செய்துகொண்டிருந்த போது,மைதானத்தில் நெஞ்சை பிடித்து சரிந்தார்.

உடனடியாக மருத்துவக்குழு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றது,அங்கே பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டதாக கூறி,அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தார்கள்.
தற்போது அவரது ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை சரி செய்து ஸ்ட்ரென்த் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார்.
மேலும் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அவரை கண்காணிக்க சிறப்பு மருத்துவக்குழுவை அனுப்பியுள்ளது.இந்த தகவலால் அவருடைய குடும்பம் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமீம் இக்பால் மீண்டும் விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #GetWellSoonTamim என்ற ஹேஷ்டேக்கில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.