கேரளா தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி விபத்து… பீறிட்டு வெளியேறிய கரியமில வாயு ; பீதியடைந்த வாகன ஓட்டிகள்..!!

Author: Babu Lakshmanan
27 April 2023, 6:53 pm

கோவை ; கோவை – கேரளா தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் கரியமில வாயு வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.

காஞ்சிக்கோட்டில் இருந்து கோவை நோக்கிச் சென்ற டேங்கரின் பின்புறம் மற்றொரு வாகனம் மோதியது. டேங்கரின் பின்புறம் உள்ள குழாய் வெடித்து கரியமில வாயு வெளியேறியது. எரிவாயு கசிவு காரணமாக, கோவை – திருச்சூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

2 மணி நேரம் கழித்து எரிவாயு வெளியேறியது. மாலை 4 மணிக்கு போக்குவரத்து சீரானது. விபத்துக்குள்ளான வாகனத்தில் கரியமில வாயு கலந்திருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்