ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்.. கடலில் நீராடுவதற்காக முக்கடலில் குவிந்த பொதுமக்கள்…!!

Author: Babu Lakshmanan
17 July 2023, 10:50 am

ஆடி அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் காலை முதல் ஏராளமானோர் மறைந்த தங்கள் மூதாதையர்களை நினைத்து கடலில் குளித்து பலிகர்மம் செய்து தர்ப்பனத்தில் ஈடுபட்டனர்.

ஆடி அமாவாசை தினத்தில் கடலில் அல்லது நீர் நிலைகளில் நீராடி வேத விற்பனர்கள் மூலம் எள், பச்சரிசி, தர்ப்பை போன்றவற்றை தர்ப்பணம் செய்து பலிகர்மத்தில் ஈடுபட்டால் இறந்த மூதாதையர்களின் ஆன்மா சாந்தி பெறும். குடும்பமும் சந்ததியினரும் விருத்தி அடைவார்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடையே உள்ளது.

இதன் அடிப்படையில் இந்த ஆண்டு இரண்டு அமாவாசைகள் வருவதால் முதல் அமாவாசையான இன்று காலை கன்னியாகுமரியில் ஏராளமானோர் கடலில் புனித நீராடி பலி கர்மம் செய்து தர்ப்பணத்தில் ஈடுபட்டனர். பின்னர், பகவதி அம்மன் கோவிலில் முன்னோர்களின் பெயரைச்சொல்லி அர்ச்சனைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். கடலில் பக்தர்கள் நீராடுவதை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதேபோல, ஆடி அமாவாசை முன்னிட்டு கோவையில் 2000 வருடத்திற்கு முன்பு பழமை வாய்ந்த பேரூர் கோவிலில் மூதாயர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலையில் இருந்தே கூட்டம் அலைமோதி வருகிறது.

ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை முயல் ஆற்றில் தங்கள் மூதாயர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் செய்து வருகின்றனர். கடந்த வருடம் போல் இல்லாமல் இந்த வருடம் மழைப்பொழிவு இல்லாததால் ஆற்றில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் தர்ப்பணம் செய்யும் பக்தர்களுக்கு சஃபர் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அதிகாலை முதற்கொண்டு பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர். பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 360

    0

    0