‘அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கனும்… பாட்டிலுக்கு ரூ.10 வசூலிச்சா தான் தர முடியும்’ ; புலம்பும் டாஸ்மாக் ஊழியர்!!

Author: Babu Lakshmanan
9 June 2023, 11:59 am

திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது.

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக எழுந்த புகார் பூதாகரமான நிலையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்து அடுத்தடுத்து இதுபோன்ற வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருப்பதாகவும், அதனால் தான் பணம் வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர்கள் அடுத்தடுத்து புகார்களை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திண்டுக்கல் அருகே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காகவே பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக டாஸ்மாக் ஊழியர் புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. மடூர் புகையிலைப்பட்டி பகுதியிலுள்ள அரசு டாஸ்மாக் கடையில் நேற்று மது வாங்க சென்ற குடிமகன் ஒருவரிடம் விற்பனையாளர் ரூ. 130க்கு பதிலாக ரூ.140 கேட்டார்.

ரூ.10 அதிகமாக வாங்குகிறீர்களே ஏன் என குடிமகன் கேள்வி எழுப்ப, விற்பனையாளரோ, “குறிப்பிட்ட அதிகாரிகளின் பதவிகளை கூறி அவர்களுக்கு லஞ்சம் கொடுக்கிறோம். அதனால் தான் அதிகம் வாங்குகிறோம். அனைத்து அதிகாரிகளுமே வாங்குகின்றனர்,” என்பது போல பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 584

    0

    0