டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல்.. சிக்கும் அரசு? அண்ணாமலையின் திடீர் அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2025, 8:00 pm
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர்.
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் ரெய்டு நடந்தது. இதில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.
இதையும் படியுங்க : மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? – திமுக அமைச்சருக்கு ஜெயக்குமார் சரமாரி கேள்வி!
இது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. பாட்டிலுக்கு ரூ 10 முதல் 30 வரை கூடுதல் வசூலிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பார் உரிமங்கள் வழங்குவதிலும், அதற்கான ஒப்பந்தங்களிலும் தவறிழைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளுது.

மேலும் பார் உரிம டெண்டர்கள் முறையான KYC, GST, PAN விபரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர் தரப்பட்டுள்ளதாகவும், சோதனையில் ரூ.1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, டாஸ்மாக் முறைகேடு விவகாரம் வரும் நாட்களில் பூதாகரமாக வெடிக்கும் என கூறியுள்ளார்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார். இந்த ஊழல் குறித்து முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்றும், இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பும் என்றும், பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்படும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.