பட்டப்பகலில் டாஸ்மாக் ஊழியரை அரிவாளால் வெட்டி ரூ.8 லட்சம் கொள்ளை : முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 March 2023, 6:35 pm

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்களன் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையில் திருவாரூர் விளமல் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவரது மகன் தக்ஷிணாமூர்த்தி (வயது 53) என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இரண்டு நாளுக்கு ஒருமுறை டாஸ்மாக்கில் மது விற்பனை செய்த பணத்தை நன்னிலம் வங்கிக்கு பணம் போடுவதற்காக வருவது வழக்கமாக இருசக்கர வாகனத்தில் வருவார்.

இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் வீதிவிடங்கன் பகுதியிலிருந்து ஸ்ரீவாஞ்சியம் வழியாக நன்னிலம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது ஸ்ரீவாஞ்சியம் அருகே இரண்டு மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு வழிமறித்து அறிவாளால் கையை வெட்டி காயப்படுத்தி அவர் வைத்திருந்த 8 லட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பிடுங்கிச் சென்றுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு முகமூடி மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!