‘கலெக்டர் கிட்டயே கம்ப்ளைண்ட் பண்ணிக்கோ’ : கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்ற டாஸ்மாக் ஊழியர்… மதுப்பிரியர் வாக்குவாதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2022, 4:42 pm

கன்னியாகுமரி : சுவாமியார்மடம் டாஸ்மாக்கடையில் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 5 ரூபாய் வசூலித்ததால் ஊழியரிடம் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமியார்மடம் பகுதியில் அமைந்துள்ளது தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை. இந்த கடையில் நேற்றிரவு மதுப்பிரியர் சிலர் மது வாங்குவதற்காக சென்றுள்ளனர்.

அப்போது டாஸ்மாக் கடை ஊழியர்கள் அவர்களிடம் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 5-ரூ வசூலித்ததாக தெரிகிறது. இதனையடுத்து மதுப்பிரியர் ஒருவர் ஏன் கூடுதலாக 5-ரூபாய் வசூலிக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட ஊழியரோ வேண்டுமென்றால் வாங்கிக்கொள் எனவும் கலெக்டரிடம் வேணும்னா கம்ப்ளய்ன்ட் பண்ணு என கூறியதால் மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதத்தை அருகில் நின்ற மது பிரியர் ஒருவர் அதை செல்போணில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற அது தற்போது வைரலாகி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி