பொதுமக்களை மிரட்டிய டாஸ்மாக் பணியாளர்.. பட்டாகத்தி, அரிவாளுடன் தகராறு : இருவர் காயம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 July 2024, 5:47 pm

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு இவர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் பணியாற்றி வருகிறார்

இந்த நிலையில் நேற்று ஜெரால்டு தனது காரில் வந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் இருசக்கர வாகனத்தில் நின்று பேசிக் கொண்டிருந்ததாகவும் ஜெரால்ட் அவர்கள் மீது காரை ஏற்றுவது போல சென்றதாகவும் கூறப்படுகிறது

இதன் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் ஜெரால்டு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது

இதில் ஜெரால்டு தரப்பை சேர்ந்தவர்கள் கையில் பட்டாகத்தி மற்றும் அரிவாளுடன் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த இரண்டு பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 263

    0

    0