Categories: தமிழகம்

என்னோட சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படாததால் டாஸ்மாக் பார் ஆக மாறியுள்ளது : வானதி சீனிவாசன் வருத்தம்!

என்னோட சட்டமன்ற அலுவலகம் திறக்கப்படாததால் டாஸ்மாக பார் ஆக மாறியுள்ளது : வானதி சீனிவாசன் வருத்தம்!

பாஜக சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் முன்பாக தொகுதிக்கு உட்பட்ட மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன்,தமிழ்நாட்டில் வெயில் அதிகமாக உள்ளது.இந்தியாவிலேயே ஈரோடு, சேலம் மாவட்டத்தில் வெயில் அதிகமாக பதிவாகி வருவது அபாயமானது.

தமிழ்நாட்டிற்கு தொழிற் சாலை வளர்ச்சி, நகர் மையம் ஆக்குதல் போன்றவை முக்கியம் என்றாலும் அதனை சுற்றுச் சூழல் உடன் இணைத்து செய்ய வேண்டும். பல்வேறு அமைப்புகள் மரம் வளர்த்தல், நிலத் தடி நீர்மட்டம் உயர்த்த நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவர்களை ஒன்றிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மரம் நட்டு பாதுகாக்க வேண்டும். புவி வெப்பமடைதல் தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு நீக்க நிதி ஒதுக்கீடு போதாது. லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது.அதனை கண்காணிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். தெற்கு தொகுதியில் 20 லிட்டர் இயந்திரங்கள் அமைத்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்காமல் இருப்பது சிரமமாக உள்ளது. கல்லூரி அட்மிஷன் போன்றவைக்கு எம்.எல்.ஏ.,வை தேடி பொதுமக்கள் வருகின்றனர். எனவே, தேர்தல் முடிந்த இடங்களில் தேர்தல் ஆணையம் விதிமுறைகள் தளர்த்தி சட்டமன்ற அலுவலகங்கள் திறக்க ஏற்பாடு செய்ய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பிரச்சினையை தி.மு.க அரசு பேசுவதில்லை.சவுக்கு சங்கர் பா.ஜ.க வையும் மற்றும் என்னையும், விமர்சனம் செய்து இருக்கிறார்.கஞ்சா கேஸ் போடும் பழைய நடைமுறையை அரசு கையில் எடுத்து உள்ளது.

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்பது உண்மையா ? என எனக்கு தெரியாது. நான் அவருக்கு வக்காளத்து வாங்க பேசவில்லை.தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் படிக்க: இதுக்கு மேல போன கலவரம் வெடிக்கும் பிரதமர் மோடியை தடுத்து நிறுத்துங்க.. ஐகோர்ட்டில் செல்வப்பெருந்தகை போட்ட வழக்கு

தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய போதிய நிதியை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் எங்கு வாக்கு சதவீதம் குறைகிறது என பார்த்து வருகிறது.வாக்களிப்பது கட்டாயம் என ஏற்படுத்த வேண்டும் என்ற நிலை உருவாகி வருகிறது.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறும்.தெற்கு தொகுதியில் ஏன் வாக்கு சதவீதம் குறைந்து உள்ளது குறித்து தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது.நகர் பகுதியில் வாக்காளர்கள் பட்டியலில் இரண்டு அட்டை வைத்து இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதனை கண்காணித்து சரி செய்ய வேண்டும். கணவருக்கு ஒரு பூத், மனைவிக்கு ஒரு பூத் என இல்லாமல் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரே பூத் இருப்பதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும். அடுத்த தேர்தலுக்குள் சரி செய்ய வேண்டும்.

பொள்ளாச்சியில் தென்னை மரங்கள் காய்ந்து உள்ளது. தென்னை மரங்களை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.பெண்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி செய்ய வேண்டும்.மேலும், தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் கிடந்த மது பாட்டில்கள் குறித்து பதிலளித்தவர், சட்டமன்ற அலுவலகம் திறக்காமல் விட்ட சில நாட்களில் சமூகவிரோதிகள் எங்கள் அலுவலகத்தை டாஸ்மாக் கடை பார் ஆக்கி விட்டார்கள் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

25 minutes ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

46 minutes ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

2 hours ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

2 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

15 hours ago

சூர்யா வீட்டில் திடீர் விசேஷம்…படையெடுத்த பிரபலங்கள்..குஷியில் ஜோதிகா.!

பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…

16 hours ago

This website uses cookies.