டாஸ்மாக் விற்பனையாளரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் : பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 January 2023, 4:01 pm

புத்தாண்டு கொண்டாட்டம்… டாஸ்மார்க் சேல்ஸ்மேன் பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபர்களால் பரபரப்பு CCTV காட்சிகள்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தம்பட்டி 3393 என்ற எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விற்பனையாளராக மல்வார் பட்டியை சேர்ந்த பாலமுருகன் (வயது 45) என்பவர் பணியாற்றி வருகிறார்.

புத்தாண்டு தினம் என்பதால் கடை திறந்தது முதலே பரபரப்பாக வியாபாரம் நடைபெற்று வந்தது. நேற்று மாலை 4 மணி அளவில் அங்கு வந்த மாரம்பாடியைச் சேர்ந்த பிரவீன் என்பவரும் அவருடன் வந்த இரண்டு பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பீர் பாட்டில் வாங்கியுள்ளனர்.

சிறிது நேரம் கழித்து திரும்ப வந்து எங்களுக்கு இந்த பீர் வேண்டாம் விலை அதிகமான பீர் வேண்டும் என்று கேட்டுள்ளார்கள். அதற்கு சேல்ஸ்மேன் பாலமுருகன் அந்த பீர் விலை அதிகம் அதற்கான தொகையை கொடுத்தால் கொடுக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

ஆனால் பிரவீன் தரப்பினரோ பணம் அதிகமாக கொடுக்க மாட்டோம் இதுக்கு பதில் விலை அதிகமான பீர் வேண்டும் என்று மிரட்டி உள்ளனர்.
தொடர்ந்து சேல்ஸ்மேன் மறுக்கவே ஆத்திரம் அடைந்த பிரவீன் முன்பு இருந்த டேபிளை தூக்கி எறிந்து விட்டு கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை ஓங்கி கதவில் அடித்து உடைத்து சேல்ஸ்மேனை தாக்கியுள்ளார்.

மேலும் கடைக்குள் தப்பி ஓடிய பாலமுருகனை விரட்டி சென்று கடைக்குள் புகுந்து தாக்கியுள்ளார். வெளியில் நின்றிருந்த இரண்டு பேரும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அடித்து உடைத்துள்ளனர்.

இதனால் டாஸ்மாக் கடை வளாகமே பரபரப்பாக காணப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திலிருந்து மூன்று பேரும் தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து பாலமுருகன் வியாபாரத்தை நிறுத்தி விட்டு டாஸ்மார்க் மேலதிகாரிகளுக்கும் வேடசந்தூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் பாலமுருகனிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டார். மேலும் டாஸ்மார்க் கடையில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் எடுத்துச் சென்றார்.

இது குறித்து சேல்ஸ்மேன் பாலமுருகன் போலீசாரிடம் அளித்த புகாரில் பிரவீன் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு பேர்கள் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து கலாட்டாவில் ஈடுபட்டதுடன் பாட்டிலை உடைத்து என்னை தாக்கியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

https://vimeo.com/785683127

இதில் பிரவீன் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது பெரியப்பாவை கொலை செய்துவிட்டு சிறையில் இருந்து தற்போது தான் வெளியில் வந்துள்ளார் என்றும், அவர் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கடை பூட்டப்பட்டிருந்ததால் மது பிரியர்கள் ஏராளமானோர் நேரம் ஆக ஆக குவிந்து கொண்டே இருந்தனர். இதனால் டாஸ்மார்க் கடை வளாகத்தில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 487

    0

    0