வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை : மதுரை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan6 September 2024, 3:48 pm
வரும் 11ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் 11.9.2024 அன்று அமரர் இமானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனை கடைகள் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் (FL1,FL2,FL3,FL3A,&FL11) அனைத்தும் அன்று காலை 10 மணி முதல் இரவு 12 வரை இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று மூடப்பட்டு இருக்கும்
மேற்படி நாளில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் அன்றைய தினங்களில் மதுபான சில்லறை விற்பனை எதுவும் நடைபெறாது என தெரிவிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா சுற்றறிக்கை மூலம் தகவல்