அசல் ரேட்டுக்கு எல்லாம் தர முடியாது… ரூ.10 கொடுத்து சரக்க வாங்கிட்டு போ ; டாஸ்மாக் விற்பனையாளர் கறார்..!!!

Author: Babu Lakshmanan
30 April 2024, 8:31 pm

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் 10 ரூபாய் அதிகம் தராததால் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மது கொடுக்க மறுத்த வீடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூரில் வாரச் சந்தைக்கு எதிரே அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அங்கு மது வாங்க வந்த ஒருவர், குவாட்டர் மதுபானம் கேட்டுள்ளார். தன்னிடம் குவாட்டர் மதுபானத்திற்கு சரியான தொகை ரூ.140 மட்டுமே உள்ளதாகவும், அதிகப்படியாக தரவேண்டிய 10 ரூபாய் குறைவாக உள்ளது. மறுமுறை வரும் பொழுது தருவதாக கூறி மது கேட்டுள்ளார்.

மேலும் படிக்க: கேஎல் ராகுல், ருத்து-க்கு கல்தா… டி20 உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு ; முழு விபரம் இதோ..!

ஆனால் அரசு டாஸ்மாக் கடை விற்பனையாளர் தங்கம், அதிகப்படியான ரூபாய் 10 தந்தால் மட்டுமே மதுபானம் தர முடியும். இல்லையென்றால் தர முடியாது, என அலட்சியமாக பதில் கூறியுள்ளார். மது வாங்க வந்த நபர் பதிவு செய்த இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  • Dragon Movie Box Office Collection கயாடுவுக்கு படத்தில் முதலில் இந்த ரோல் தான்…அஸ்வத் மாரிமுத்து கொடுத்த ஷாக்.!