வாகன சட்டத்தால் வரி உயர்வு: வருமானம் இழப்பு ஏற்படுவதாக ஓட்டுநர்கள் முற்றுகை போராட்டம்..!!

Author: Rajesh
18 April 2022, 3:12 pm

கோவை: 13,000 மேற்பட்ட ஆட்டோக்கள் வாகன சட்ட உயர்வால் வருமானம் இழப்பு ஏற்படுவதாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அறிவித்துள்ள வாகன சட்டத்தில் அதிகமான வரி உயர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ தொழிலாளர்கள் உயர்த்தப்பட்ட வரியை ரத்து செய்ய சொல்லி மாவட்டங்களில் இருக்கின்ற போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருவதாகவும் பெரும் தொற்று நோய் பரவல் காரணமாக ஆட்டோக்களில் கட்டண உயர்வு மத்திய அரசு அறிவித்துள்ள வரி உயர்வை தங்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதித்துள்ளது.

கோவை மாவட்ட ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாளொன்றுக்கு எஃப் சி கட்டணம் 50 ரூபாய் என்றும் தரச் சான்றிதழ் பெற 600 லிருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1183

    0

    0