‘குத்துலயே-னு சந்தோஷப்படு’.. நடுரோட்டில் கத்தியை காட்டி மிரட்டிய வாடகை கார் ஓட்டுநர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

Author: Babu Lakshmanan
9 March 2023, 12:53 pm

கோவை : கோவையில் கார் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக கோவை இருந்து வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக ஆங்காங்கே பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமானப் பணிகளால் கடுமையான டிராபிக் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் கார் ஓட்டி வந்ததில் ஏற்பட்ட தகராறில் வாடகை கார் ஓட்டுநர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் – திருச்சி சாலை மேம்பாலத்தில் பெண் ஓட்டி வந்த கார் மீது வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் மோதியதாக தெரிகிறது. இதனால் சாலையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, வாடகை கார் ஓட்டுநர் கத்தியை எடுப்பது போல மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!