நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த டிடிஎஃப் வாசன்… அதிகாலையில் வீடு புகுந்து கைது : பரபரப்பு!!!
அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் அவர்களிடத்திலே மோகத்தை ஏற்படுத்திவரும் பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின்பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.இவர் மஞ்சள் வீரன் என்கிற படத்திலே தற்போது நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில் TTF வாசன் சென்னையிருந்து-மகாராஷ்டிராவிற்கு தனது நண்பரான அஜித் என்பவர் உடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற போது ஒருவரைக்கொருவர் முந்தி பைக் ரேஸில் ஈடுபட்டதும் அதிவேகமாக வாகனத்தினை இயக்கி ஸ்டண்ட் என்று சொல்லப்படக்கூடிய வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
மேலும் வரக்கூடிய வழிகளில் தனது ஆதரவாளர்கள் என்று சொல்லப்படக்கூடிய FOLLOWERS களை வரவழைக்கும் தொடர்ந்து தான் வரும் இடங்கள் குறித்து சமூகவளைதளங்களிலே பதிவிட்டிருக்கிறார்.
ஆங்காங்க இளைஞர் சிலர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குழுமியிருக்கின்றனர். அவர்களை மகிழ்ச்சிபடுத்தும் நோக்கில் TTF வாசன் வீலிங் சாகசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது வீல்லிங் சாகசத்தில் ஈடுபட்ட TTF வாசன் பைக்கின் பின்புறமானது சாலையில் தேய்ந்து நிலைதடுமாறி பைக்கானது இரண்டு மூன்று முறை தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் TTF வாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு காரப்பேட்டை அருகிலுள்ள மீனாட்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்ற நிலையில் அவரது கைக்கு மாவுகட்டானது போடப்பட்டு கால், உடல் போன்ற உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயங்களுக்கு சகிச்சைகளானது அளிக்கப்பட்டது.
இதனையெடுத்து தான் சென்னையில் சிகிச்சை பெற்று கொள்ளவதாக கூறிய நிலையில் அவரது நண்பர்கள் அவரை அழைத்து சென்றிருக்கின்றனர்.
இந்த நிலையில் TTF வாசன் மீது பாலுச்செட்டி சத்திரம் காவல் துறையினர் 279 IPC மனித உயிருக்கு ஆபத்து உண்டாகும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில், ஒரு வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுவது, 308 IPC பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முறையில் அசட்டுத் துணிச்சலுடன் வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னையில் உள்ள நண்பர் அபீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கி இருந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன் இன்று விடியற்காலையில் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இவர் மீது பொதுமக்களை அச்சுறுத்தும் விதம் 279, மரணம் விளைவிக்கும் விதத்தில் குற்றம் செய்தல் 308 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 184, 188 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய ஆதவாளர்கள் காவல் நிலையத்திற்கு வந்து குவிவார்கள் என்ற காரணத்துக்காக காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.