மண்ணுக்குள் புதைந்த ஆசிரியை… ஒரு மணி நேரம் நடந்த போராட்டம் : மண்சரிவால் விபரீதம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2024, 10:54 am

குன்னூரில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய ஆசிரியையின் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவமனை அருகே அலைசேட் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ரவி.

இவரது மனைவி ஜெயலட்சுமி, 42. இவர் சாந்தி விஜய் பள்ளி ஆசிரியை. மகள்கள் வர்ஷா, வையூ. இந்நிலையில் நேற்று இரவு 9:00 மணியில் இருந்து கன மழை கொட்டி தீர்த்தது.

இரவு 10: 00 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டது. சப்தம் கேட்டு கதவை திறந்து வெளியே வந்த ஜெயலட்சுமி மண்சரிவில் மண்ணில் புதைந்தார். மற்ற மூவர் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதையும் படியுங்க: தியாகம்னா என்னனு தெரியுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி X தளத்தில் கொடுத்த பதிலடி!!

தகவலின்பேரில் குன்னுார் தீயணைப்பு துறையினர் , அப்பகுதி மக்கள், வீட்டில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர்.

மண்ணில் புதைந்த ஜெயலட்சுமியின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. வருவாய் துறையினர், போலீசார், நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • I trusted director Bala and went astray.. The actor has left cinema இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!