ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி… ஏமாற்றியவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

Author: Babu Lakshmanan
17 April 2024, 10:51 am

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36 கோடியே 13 லட்சம் மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.36 கோடியே 13 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஆறுமுகநேரி பாரதிநகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமாரேசன் (46) என்பவரை தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

மேலும் படிக்க: ஓபிஎஸ் தரப்பு – பாஜகவினரிடையே மோதல்… ராமநாதபுரத்தில் உச்சகட்ட பரபரப்பு ; போலீசார் குவிப்பு

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பாலகுமாரேசனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!