போக்சோ வழக்கு போட்டதால் ஆசிரியை தற்கொலை.. அரசுப் பள்ளி முறைகேட்டில் அரசியல் பிரமுகர் உடந்தை? வைரலாகும் ஆடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2022, 10:54 am

மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி ஆசிரியை பேசிய செல்போன் உரையாடல் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள நெட்ட வேலம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிவரும் மோகன்தாஸ் என்பவர் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் மோகன்தாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றிய லில்லியிடம் மாணவிகள் தகவல் தெரிவித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை என்ற காரணத்திற்காக ஆசிரியை லில்லியை இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக போலீசார் சேர்ந்து வழக்கு பதிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து ஆசிரியை லில்லி தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையில் மன உளைச்சலுக்கு ஆளான லில்லி கடந்த 14ம் தேதி மண்ணச்சநல்லூரில் உள்ள அவரது தாய் வீட்டு கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆசிரியை லில்லி தற்கொலை செய்வதற்கு முன் தனது வழக்கறிஞரிடம் நடந்த சம்பவம் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் ஒருதலைப்பட்சமாக நடந்து கடிந்துகொள்வதை லில்லி தட்டிக்கேட்டதனால் காழ்ப்புணர்ச்சி அடைந்த அவரும் அவருக்கு ஆதரவாக உள்ள லேப் அசிஸ்டன்டும் சேர்ந்து இந்த வழக்கில் என்னை திட்டமிட்டு மாட்டிவிட்டு உள்ளனர்.

துறையூரில் உள்ள அரசியல் கட்சியின் முக்கிய பிரமுகரின் உறவினரான சசிகலா தலைமை ஆசிரியருக்கு உடந்தையாக செயல்பட்டு பள்ளியில் எவ்வித பிரச்சினைகள் வந்தாலும் சரிசெய்து விடுகின்றனர்.

மேலும் மாணவ மாணவிகளிடம் சொல்லி அனைத்து வகுப்பு மாணவர்களிடம் முறைக்கேடாக பணம் வசூல் செய்கிறார்கள். பள்ளியில் நடக்கும் அனைத்து தவறுகளையும் நான் எங்கே வெளியில் சொல்லிவிடுவோனோ என்றுதான் இதுபோன்று என்னை சிக்க வைத்துள்ளனர்.

இந்த உண்மைகளை பள்ளி மாணவர்கள் பெற்றோர் மற்றும் மீடியா முன்னால் சொல்லியே ஆகவேண்டும் என லில்லி பேசியது உரையாடல் ஆடியோவில் பதிவாகியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ