ஆசிரியர்கள் பணியிடமாற்றம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2023, 9:34 pm

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக பள்ளிகளுக்கு மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 5 லட்சமும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் 4,லட்சத்து 22, ஆயிரத்து 100 உட்பட மொத்தம் 9லட்சத்து 22 ஆயிரத்து 100ரூபாய் மதிப்பில் 56 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், திருவெறும்பூர் முன்னாள் எம்எல்ஏ சேகரன், திருவெறும்பூர் ஒன்றிய குழு தலைவர் சத்யா, மாநகராட்சி துணை மேயர் திவ்யா, திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மார்ச் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி பொது தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு செய்முறை வகுப்பு நடத்தி முடிக்கப்படும். அது எந்த தேதிக்குள் வேணுமானாலும் அவர்கள் வசதிக்கு ஏற்ப முடித்துக் கொள்ளலாம். திட்டமிட்டபடி மார்ச் 13ஆம் தேதி பள்ளி பொது தேர்வு நடைபெறும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வேறு பள்ளிகளுக்கு தற்போது பணியிடம் மாற்றம் செய்யப்படுவது வேண்டாம் என கமிஷனிடம் தெரிவித்து நிறுத்தப்பட்டுள்ளது.

அப்படி பணியிடமாற்றம் செய்தால் பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவ மாணவிகளும் தேர்வு பாதிக்கப்படும். பொது தேர்வு என்பது தேர்தலுக்கு நிகரானது .

இன்று முதல் வரும் 25ஆம் தேதி வரை ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பணிக்கு செல்வதாகவும் தனக்கு 4 பூத் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 3 ஆயிரத்து 271 வாக்காளர்கள் உள்ளார்கள் என தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 609

    0

    0