“எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்குகிறோம்” : கியாஸ் சிலிண்டருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ம.நீ.ம!!
Author: Udayachandran RadhaKrishnan4 April 2022, 12:32 pm
கோவை : எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்குவதாக மக்கள் நீதி மையத்தினர் கியாஸ் சிலிண்டர் குறித்து கோவையில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
நாடு முழுவதும் 5 மாநில தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில், பல்வேறு அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கியாஸ் சிலிண்டர்மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி 80 மற்றும் 81வது வார்டு பகுதியை சேர்ந்த மக்கள் நீதி மையத்தினர் கோவையில் பல்வேறு இடங்களில் கியாஸ் சிலிண்டர் குறித்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் தோற்றம் 2014 ஆம் ஆண்டு ரூபாய் 410 என்றும் ஏற்றம் 2022ஆம் ஆண்டு ரூபாய் 980 என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கடுமையான விலை ஏற்றத்தால் எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்கும் என்று முடித்து இல்லத்தரசிகள் என்று தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.