கள்ளுக்கடைக்கு எதிர்ப்பு…காந்தி மகானாக ‘விக்ரம்’..சஸ்பென்ஸ் ரோலில் ‘துருவ்’: கவனம் ஈர்க்கும் மகான் டீசர்..!!

Author: Rajesh
31 January 2022, 1:17 pm

விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் மகான் படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

மகான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மகான்’. இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்துள்ளார். மேலும், சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழு தற்போது வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் வெளியான போஸ்டர்கள் நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, தற்போது படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த டீசரில் துருவ் விக்ரமின் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. இப்படம் பிப்ரவரி 10ம் தேதி நேரடியாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!