Categories: தமிழகம்

செல்போனால் வந்த விபரீதம் : கள்ளத்தொடர்பால் இளம்பெண் தற்கொலை : கள்ள காதலன் மீது வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் புகார்…

திருச்சி : திருச்சியில் மனைவியின் தற்கொலைக்கு காரணமான கள்ள காதலன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவன் புகார் அளித்த சம்பவம் ரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் குமுளூரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்(45). இவருக்கு மீனா என்ற மனைவியும், 2 மகன் ஒரு மகள் உள்ளனர். உள்ளுரில் சரிவர வருமானம் கிடைக்காத பாலசுப்ரமணியம் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தை நல்லபடியாக காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு சம்பாதித்த பணத்தை அவர் மீனாவிற்கு அனுப்பி வைத்தார். அதில் மீனா குழந்தைகள் நன்கு படிக்க வைத்து குடும்பத்தை நல்லபடியாக நடத்தி வந்தார். இந்த நிலையில் கணவருடன் பேசுவதற்காக வாங்கிய செல்போனில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடன் மீனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்தவர்கள், உறவினர்கள் மீனா அவருடைய கணவருடன் பேசுவதற்காக தான் அவருடன் பழகி உள்ளார் என்று இருந்தனர்.

ஒரு கட்டத்தில் சுரேஷுக்கு வெளிநாடு சென்று சம்பாதிக்கும் ஆசை ஏற்பட எனக்கும் பணம் கொடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி வை என மீனாவை கட்டாயப்படுத்தவே வேறு வழியின்றி கணவர் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தில் 2 லட்சம் ரூபாய் வரை செலவழித்து சுரேசை மீனா வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். வெளிநாட்டிற்கு சென்ற சுரேஷுடன் ஆரம்பத்தில் பேசிய மீனா அவருடனான தொடர்பை துண்டிக்கும் வகையில் நடந்து கொண்டார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சுரேஷ் உனக்கு வேறு யாருடனோ தொடர்பு உள்ளது? அதனால் என்னை வெறுத்து பேசுகிறாயா? என கூறவே நன்றி மறந்து விட்டு அநியாயமாக பேசுகிறாயே, என பொங்கிய மீனா ஒரு கட்டத்தில் தான் கொடுத்த 2 லட்ச ரூபாய் பணத்தை வசூலிக்க முடிவெடுத்து சுரேஷின் பெற்றோர் வீட்டிற்கு சென்று சுரேஷ் வெளிநாடு செல்ல தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.

ஆனால் சுரேஷ் குடும்பத்தினரோ மீனாவை நடுரோட்டில் வைத்து அவமானப்படுத்தி அனுப்பி விட்டனர். இதனால் அவமானம் தாங்காத மீனா தனது வீட்டுக்கு சென்று கடந்த மாதம் 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீனா தற்கொலை செய்து கொண்டதாக வெளிநாட்டில் இருந்த கணவனுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் உடனடியாக வர முடியாத நிலையில் மீனாவின் உறவினர்கள் கூடிப்பேசி மீனாவின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று எரித்து விட்டனர். ஆனால் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தாரால் எழுந்த பிரச்சனை காரணமாகவே மீனா தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் உறவினர் மத்தியில் பரவியது. இதனையடுத்து மீனாவின் உறவினர்கள் கடந்த மாதம் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய பாலசுப்ரமணியன் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலையை பார்த்து கதறி அழுதுள்ளார். கலங்கிய உள்ளத்தோடு என்ன செய்வது? என அறியாது வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் மனதை தேற்றிக்கொண்டு தனது மனைவி மீனா பயன்படுத்திய செல்போனை பார்த்த போது அதில் பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன. தினமும் இரவு நேரத்தில் வெளிநாட்டில் இருந்த சுரேஷ் மீனாவை மிரட்டி நிர்வாணமாக நின்று வீடியோ கால் பேச கட்டாயப்படுத்தியதை அறிந்துகொண்டார்.
அப்படி மிரட்டிய வீடியோவில் இருவரும் நிர்வாண நிலையில் இந்த வீடியோக்கள் மீனா செல்போனில் இருந்தது அவரை அதிர்ச்சி அடைய செய்தது.

மேலும் மீனா தற்கொலை செய்வதற்கு முன்பு சுரேஷ் வீட்டிற்கு பணம் வாங்க சென்றபோது நடந்த விவகாரத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன். எனச் சாவிற்கு சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் பொறுப்பு என பேசிய வீடியோ அதில் இருந்தது. இந்த வீடியோக்களை பார்த்த பாலசுப்ரமணியம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் புகாராக எழுதி லால்குடி DSP யிடம் புகார் அளித்ததன் பேரில் கடந்த 22ஆம் தேதி வெளிநாட்டில் இருக்கும் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டியது, செல்போன் மூலம் ஆபாசமாக பேசியது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைப்பேசி என்பது ஒருவரை தொடர்பு கொள்வதற்கு மட்டுமே என்பதை மறந்து அதன்மூலம் தவறான பழக்கங்களை ஏற்படுத்தி ஒரு இல்ல தலைவியின் தற்கொலைக்கு எமனாக இருந்துள்ளது. எனவே செல்போனை எவ்வாறு பயன்படுத்த கூடாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்றாக உள்ளது.

KavinKumar

Recent Posts

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

3 minutes ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

46 minutes ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

1 hour ago

செந்தில் பாலாஜி SAFE… அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…

1 hour ago

ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?

ஸ்ருதிஹாசனின் பிரேக்கப்  கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார்.  இருவரும் லிவ்…

2 hours ago

பாஜக முக்கியப் புள்ளி படுகொலை… நள்ளிரவில் பின்தொடர்ந்த கும்பல் வெறிச்செயல்!

புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…

3 hours ago

This website uses cookies.