கைப்பந்து போட்டி நடத்துவதில் தகராறு…பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய வாலிபர்கள்… சுற்றிவளைத்த போலீசார்.. பகீர் பின்னணி !!
Author: kavin kumar25 January 2022, 8:06 pm
புதுச்சேரி : புதுச்சேரியில் கைப்பந்து போட்டி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் சுகுமார். இவர் விடுமுறைகாக புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு அவரது வீட்டில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் வெடிகுண்டு வீசிவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து சுகுமார் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலிசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது இரவு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்வது கேமிராவில் பதிவாகி இருந்ததை அடுத்து அவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வந்ததில், பெட்ரோல் குண்டு வீசியது அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல், சூரியா, பிரவின் ஆகிய மூன்று வாலிபர்கள் என்று தெரியவந்ததை அடுத்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அரியாங்குப்பத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் எதிர் அணிக்கு ஆதரவாக செய்லபட்ட ரீயல் எஸ்டேட் அதிபர் பாண்டியனை மிரட்டுவதற்காக வீசபட்ட பெட்ரோல் குண்டு சுகுமார் வீட்டில் விழுந்ததாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று வாலிபர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.