காய்கறி அங்காடியில் திருடிய வாலிபர்கள் : காட்டிக் கொடுத்த சி.சி.டி.வி…

Author: kavin kumar
26 January 2022, 1:30 pm

புதுச்சேரி : புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காய்கறி அங்காடியில் பணம் மற்றும் செல்போன் திருடிய இரண்டு வாலிபர்கள் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் காய்கறி அங்காடி வைத்து நடத்தி வருபவர் அரவிந்த் குமார். இவரது காய்கறி கடையை 24 ஆம் இரவு 1 பூட்டிவிட்டு சென்று பின் மீண்டும் காய்கறி கடையை திறந்து பார்த்தபோது அவரது கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கிழக்கு கடற்கரை சாலையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் கடைக்குள் நுழைவது பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு விசாரித்ததில், அவர்கள் கோவிந்தசாலை கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற ஸ்டிக்கர் மணி மற்றும் சஞ்சய் குமார் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள ஸ்டிக்கர் மணி சமீபத்தில் மாமூல் கேட்ட வழக்கில் சிறை சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

  • str 49 movie shooting postponed because of director சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?