பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் : காத்திருந்த ட்விஸ்ட்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2023, 9:40 pm

கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் நேற்று இரவு வயதான பாட்டி ஒருவர் வாலிபர்கள் இருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதை பார்த்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து இதுகுறித்து பாட்டியிடம் விசாரித்த போது தான் கன்னியாகுமரியில் ஒரு உணகவத்தில் தூய்மை பணி செய்வதாகவும் வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பும் போது இந்த வாலிபர்கள் தன்னை பாலியல் சீண்டல் செய்ய முற்பட்டதாகவும் இதனால் தான் கூச்சலிடவே அவர்கள் ஓடியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த வாலிபர்களிடம் விசாரித்த பொதுமக்கள் அவர்கள் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது மது போதையில் இருந்த அந்த மாணவர்கள் நள்ளிரவில் தனியாக நடந்து சென்றது பருவ மங்கை என நினைத்து பாட்டியிடம் வம்பு செய்தது தெரியவந்தது.

இந்த இரு மாணவர்களுடன் மேலும் இரண்டு மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வரவே அவர்கலையும் சேர்த்து பொதுமக்கள் சரிவர கவனித்து அனுப்பினர்.

இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 528

    0

    0