“டயரை கூட விட மாட்டீங்களா டா… ” : லாரியின் டயரை திருடிய வாலிபர்கள் கைது…!!

Author: kavin kumar
7 February 2022, 11:12 pm

புதுச்சேரி : புதுச்சேரியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி சேதராப்பட்டில் தனியார் லாரி தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது, இந்த தொழிற்சாலை கடந்த 2 வருடங்களாக இயங்கவில்லை, இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு தொழிற்சாலை வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாரஸ் லாரியின் டயர்களை 4 மர்ம நபர்கள் கழற்றி டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி எடுத்து செல்ல முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த காவலாளிகள் அர்ஜூனன் மற்றும் பக்தவத்சலம் லாரி டயரை திருடி செல்ல இருந்தவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல் காவலாளிகளை தாக்கி விட்டு லாரி டயர்களை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதில் ஒருவர் மட்டும் காவலாளிகளிடம் சிக்கி கொண்டார். இதனை அடுத்து அவரை சேதரப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்து இச்சம்பவம் குறித்து காவலாளிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிப்பட்டவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பன்ருட்டியை சேர்ந்த சிவராமன் என்பதும், ஒட்டுனராக உள்ள அவர் தனது நண்பர்களான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன், இளவரசன், சந்திரசேகர் ஆகியோருடன் சேர்ந்து நீண்ட நாட்களாக நின்று கொண்டிருக்கும் லாரிகளில் இருந்து டயர்கள் திருடி விற்பனை செய்ய முடிவு செய்ததாகவும், நீண்ட நாட்களாக தொழிற்சாலை செயல்படாமல் உள்ளதால் அங்கு டயர் திருடியதை ஒப்புகொண்டதை அடுத்து அவரை போலீசார் புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் டயர்கள் உடன் தப்பி சென்ற அவரின் நண்பர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மூவரும் வானூர் சாலையில் டாடா ஏஸ் உடன் சுற்றி திரிவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அவர்களை வானூர் கரசூர் சாலையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது இளவரசன் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவர் மட்டும் பிடிப்பட்டனர். போலீசாரை கண்டதும் கார்த்தி என்பவர் தப்பி ஒடிவிட்டார். பிடிப்பட்டவர்களிடம் இருந்து டாடா ஏஸ் வாகனம் மற்றும் திருடப்பட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து, பிடிபட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஒடிய கார்த்தி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ