பிரியங்காவை கண்டு கொள்ளாத மா.கா.பா..? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறையுமா..?

Author: Rajesh
13 May 2022, 3:50 pm

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர்கள் அந்த பட்டாளம் உள்ளனர். அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் , போட்டியாளர்கள், நடுவர்களை தாண்டி இந்த நிகழ்ச்சியின் ஆங்கர்கள் பிரியங்காவும் மா.கா.பாவும் தான். இவர்களின் ஆங்கரிங் கெமிஸ்ட் சூப்பர் சிங்கரில் வொர்க்கவுட் ஆக, தொடர்ந்து 4 சீசன்களாக இவர்களே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

நடுவில் தனிப்பட்ட காரணங்களால் இருவரும் வர முடியாமல் போன கூட, இவர்களின் காமெடி, ஆங்கரிங்கை மிஸ் செய்வதாக இணையத்தில் மெசேஜ் விட தொடங்கி விடுவார்கள் நெட்டிசன்கள்.

அந்த அளவுக்கு மா.கா.பா – பிரியாங்காவுக்கு அதி தீவிர ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், இந்த வாரம் சூப்பர் சிங்கரில் உலக இசை திருவிழா கான்செப்ட். இதற்கு பியானோ முதல் ட்ரம்ஸ், வயலின், கிட்டார் என இசை கருவிகள் மற்றும் சில வெளிநாட்டு இசை கருவிகளுடன் சில வெளிநாட்டு இசை கலைஞர்களும் வருகை தருகின்றனர். அதில் வரும் ஒரு பெண்ணுடன் மா.கா.பாவுக்கு கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆக, இனிமேல் அவருடன் தான் சூபப்ர் சிங்கர் ஷோவை ஆங்கரிங் செய்ய போவதாக மா.கா.பா கூறுகிறார்.

இதனால் கடுப்பான பிரியங்கா அவர்களை பிரிக்க ஏதோ ஏதோ சொல்கிறார். ஆனால் மா.கா.பா காத்துவாக்குல 2 ஆங்கர் என கதை சொல்லி இருவருடனும் ஆங்கரிங் செய்ய துடிக்கிறார். இதனால் காண்டான பிரியூ, நான் விஜய் டிவியை விட்டு போறேன்னு விளையாட்டாக சொல்கிறார். அப்போது கூட மா.கா.பா பிரியங்காவை கண்டுக்கொள்ளவில்லை. இந்த புரமோ தற்போது விஜய் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இந்த புரமோவை பார்த்த சூப்பர் சிங்கர் ரசிகர்கள், நிகழ்ச்சிக்காக வெயிட்டிங் என கமெண்ட் செய்து வருகின்றனர் . அதுமட்டுமில்லை இந்த வார நிகழ்ச்சி படு கலாட்டாவாக இருக்க போகிறது எனவும் கூறியுள்ளனர்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 935

    0

    0