ஜெயிலர் பட பாடலுக்கு நடனமாடிய கோவில் யானை : வைரலாகும் குறும்பு வீடியோ!!!

Author: Udayachandran RadhaKrishnan
8 September 2023, 11:13 am

ஜெயிலர் பட பாடலுக்கு நடனமாடிய கோவில் யானை : வைரலாகும் குறும்பு வீடியோ!!!

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது இந்த கோவிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மங்கலம் மிகவும் சுட்டித்தனம் வாய்ந்தது.

மங்கலம் யானை மற்றும் அதனை பராமரிக்கும் யானை பாகனுடன் குறும்புத்தனம் செய்யும் பல வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி பெரும் வரவேற்பு பெற்று வந்தன.

https://vimeo.com/862276406?share=copy

அந்த வகையில் தற்போது யானை மங்கலம் சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் பின்னணி தீம் இசைக்கு ஏற்ப தலையை ஆட்டி உற்சாகமாக நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி