குடிபோதையில் பட்டாசை மேல் எறிந்து காவலர் மீது தாக்குதல்… கோவில் திருவிழாவில் போதை கும்பல் அட்டூழியம்..!!
Author: Babu Lakshmanan13 July 2023, 5:06 pm
வேடசந்தூர் அருகே கோவில் திருவிழாவில் பாதுகாப்பு பணிக்கு சென்ற முதன்மை காவலர் பாலமுருகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாய்க்கால் தெருவில் மதுரைவீரன் மாரியம்மன் விநாயகர் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதிகளில் உலா வந்து கொண்டிருந்தது. அந்தக் கோயில் திருவிழாவிற்கு பாதுகாப்பாக வேடசந்தூர் முதன்மை காவலர் பாலமுருகன் என்பவர் பணிக்குச் சென்றுள்ளார்.

நடுரோட்டில் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் (32), மாரிமுத்து (எ) காட்டுபூச்சி (27) வெள்ளைச்சாமி (40) போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியும் வெடியை வெடித்துள்ளனர். இளைஞர்களிடம் ஓரமாக வைக்குமாறு காவலர் பாலமுருகன் கூறியுள்ளார்.
குடிபோதையில் இருந்த இளைஞர்கள் வெடியை எடுத்து காவலர் மீது தூக்கி எறிந்ததில், அவருக்கு காலில் அடிபட்டது. மேலும், காவலரை கடுமையாக தாக்கியுள்ளனர். காவலர் தனது செல்போனில் அதை வீடியோ எடுக்க முயன்ற போது, செல்போனையும் பிடுங்கி கீழே போட்டு உடைத்து உள்ளார்கள்.
நேற்றுதான் தமிழக முதலமைச்சர் சட்ட ஒழுங்கு ஆலோசனைக் கூட்டம் நடத்திய நிலையில், வேடசந்தூர் பகுதியில் காவலர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக காவல்துறையினர்களை தாக்குதல் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்ற வருகிறது.
இதற்கு தமிழக முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.