உண்டியலை உடைச்சுதான் திருடுவாங்க.. ஆனா உண்டியலையே மூட்டை கட்டி திருடியது பார்த்திருக்கீங்களா? ஷாக் காட்சி!
Author: Udayachandran RadhaKrishnan27 May 2024, 1:40 pm
ஆந்திர மாநிலம் காக்கிநாடா சஞ்சய் நகர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் டிப்டாபாக வந்த ஒருவர் கோயில் முன்பு வெளியே செருப்பை கழற்றிவிட்டு பக்தியுடன் உள்ளே சென்றார்.
கோயிலில் யாரும் இல்லாததால் சிறிது நேரம் வெளியே அமர்ந்து கொண்டு நோட்டம் விட்டு பின்னர் உண்டியலை அலேக்காக தூக்கி கொண்டு ஒரு பையில் வைத்து தேளில் வைத்து கொண்டு வெளியே சென்றார்.
இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டுள்ள சி.சி கேமிராவில் பதிவான நிலையில் இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கோயிலில் பட்டப்பகலில் உண்டியலை திருடும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது