இளைஞரை கீழே தள்ளி நெஞ்சில் மிதித்த காவலர்… தென்காசி பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி ; வீடியோ வைரலானதால் பாய்ந்த ஆக்ஷன்..!!
Author: Babu Lakshmanan15 February 2024, 7:50 pm
தென்காசியில் இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் அடித்து நெஞ்சில் மிதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ள காவலர்கள் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர் ஒருவரை அடித்து இழுத்து தரையில் போட்டு நெஞ்சில் காலால் மிதிக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பொதுமக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பிலிருந்து எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என புகார்களும் எழுந்து வருகிறது.
புதிய பேருந்து நிலையத்தில் அந்த இளைஞர்கள் மது அருந்தியதாகவும், அப்போது காவல்துறை அவர்கள் வாகனத்தின் சாவியை பிடுங்கியதால் வாக்குவாதத்தில் போலீசார் அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வாகன சாவியை திருப்பித் தருமாறு கேட்டவரை கீழே தள்ளி காலால் நெஞ்சில் மிதித்தாக காவலர் அழகுதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.