சாலை வசதி கேட்ட கவுன்சிலர்.. சத்தம் போட்டு கடுமையாக சாடிய மாவட்ட ஆட்சியர் ; அதிர்ச்சி பொதுமக்கள்..!!
Author: Babu Lakshmanan4 August 2023, 3:49 pm
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சாலை வசதி செய்து தரக்கோரி கவுன்சிலர் கோரிக்கை வைத்த நிலையில் அவரை மாவட்ட ஆட்சியர் சத்தம் போட்டு கடுமையாக சாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தற்போது கார் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதியில் கார் சாகுபடி பணிக்காக கடனா மற்றும் ராமநதி அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் தண்ணீர் திறந்து வைக்க வருகை தந்தார்.
வருகை தந்த இடத்தில், கடையம் ஊராட்சிக்கு உட்பட்ட கவுன்சிலர் மாரிகுமார், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைகளை முன் வைத்தார். அந்த கோரிக்கையில் கடையம் பகுதியில் இருந்து ராமநதி செல்லும் சாலையை மோசமாக உள்ளது எனவும், அதனை விரைந்து சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை முன் வைத்தார்.
இதனால், கோபமடைந்துபதிலளித்த மாவட்ட ஆட்சியர், “தற்போது கார் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைக்க வருகை தந்துள்ளேன். இது குறிக்க ஏதாவது இருந்தால் கூற வேண்டும். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகள் மோசமாக தான் உள்ளது. எனவே இது குறித்து பேச வேண்டாம்,” என அப்பகுதி கவுன்சிலரை மக்கள் மத்தியில் கடுமையாக சாடினார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.