ஊராட்சி தலைவியை தகாத வார்த்தையில் திட்டிய திமுக பெண் கவுன்சிலர் : சொந்தக் கட்சிக்குள்ளேயே தள்ளுமுள்ளு!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 8:25 pm

தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் திமுக மாவட்ட ஊராட்சி தலைவியை ஒருமையில் பேசி, மோதல் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஊராட்சி கூட்டம் ஊராட்சி செயலர் (பொறுப்பு) ருக்குமணி தலைமையில், மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ் செல்வி முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் 6 வது வார்டு உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளர்கள் கூட்டரங்கில் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியவுடன் பொருள் குறித்து விவாதிக்காமல் உறுப்பினர் கனிமொழி தனிப்பட்ட பிரச்சனை குறித்து மாவட்ட ஊராட்சி தலைவி தமிழ்செல்வியுடன் சண்டையில் ஈடுபட்டார்.

இதில் உறுப்பினர் கனிமொழியின் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஊராட்சி தலைவியை ஒருமையில் பேசியதுடன், சக திமுக உறுப்பினர்களையும் அவர்கள் தரக்குறைவாக பேசி, தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர்.

மேலும், கூட்டத்தை நடக்கவிடாமல் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து, தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் கூட்டத்திற்கு தொடர்பற்ற அவர்களை அப்புறப்படுத்தி, காவல்துறை பாதுகாப்புடன் கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1081

    0

    0