மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொலை.. பாழடைந்த வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சடலம் ; போலீசார் விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
10 April 2023, 2:25 pm

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியில் உள்ள கரையாளர் தெருவை சேர்ந்தவர் தங்கையா. இவரது மகள் முப்புடாதி (வயது 43). இவருக்கு கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது முப்புடாதியின் தந்தை மற்றும் தாய் உயிரிழந்த சூழலில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், முப்புடாதி இரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் அவர் வசித்து வந்த பாழடைந்த வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கம் சேர்ந்தவர்கள் உடனே சம்பவம் குறித்து செங்கோட்டை போலீசருக்கு தகவல் கொடுக்கவே, தகவலின் பேரில் விரைந்து வந்த செங்கோட்டை போலீசார், மனநலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்த முப்புடாதியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, உயிரிழந்த முப்புடாதியின் உடலில் ரத்த காயங்கள் அதிகமாக இருந்ததும், அவர் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து, மேல் பிரேத பரிசோதனை செய்வதற்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு முப்புடாதி உடலை அனுப்பி வைத்த நிலையில், சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக செங்கோட்டை போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 504

    0

    0