மதுபோதையில் லாரியை ஓட்டியதால் பயங்கர விபத்து… குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்த கோர சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 9:51 pm

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் லாரி மோதி பெண் குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகேயுள்ள செலவடை கிராமத்தில் தேங்காய் பாரம் ஏற்றிய லாரி தாரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த்து.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
 


இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மானத்தாள் கிராமத்தைச் சேர்ந்த மாதையன் (30), சங்ககிரியைச் சேர்ந்த காளியப்பன் (40), ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த சாந்தி (35) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய ஒன்றரை வயது பெண் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். லாரி ஓட்டுநர் மது அருந்திய நிலையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ