ஆவின் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து : தீப்பற்றி எரிந்த கார்.. தீயில் கருகி ஒருவர் பலி.. நெஞ்சை உலுக்கும் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2022, 6:12 pm

திண்டிவனம் அருகே லாரி மீது அடுத்தடுத்து கார் மோதிய விபத்தில் கார் எரிந்து ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம் அருகே ஜக்கம்பேட்டை என்ற இடத்தில் சென்னை நோக்கிச் சென்ற ஆவின் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்து சிக்கிக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பின் வந்த கார் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. திடீரென கார் பற்றி எரிந்தது காரில் இருந்தவர்கள் அனைவரும் இறங்கி உயிர் தப்பி விட்டனர்.

கார் மற்றும் லாரியும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஒரு வழி பாதையில் போக்குவரத்து இயக்கப்படுகிறது

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!