பைக் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து.. மகன் கண்முன்னே உயிரிழந்த சித்தி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அடுத்த பலி!!
Author: Udayachandran RadhaKrishnan17 August 2023, 9:59 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாங்கம் இவருடைய மகன் வினித்குமார் (26), பொறியியல் பட்டதாரியான இவர் கள்ளக்குறிச்சில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இவருடைய தாத்தா துக்க நிகழ்ச்சிக்கு உளுந்தூர்பேட்டைக்கு வந்தவர் இன்று ஒரு இருசக்கர வாகனத்தில் தனது சின்னம்மா கற்பகம் (44) என்பவருடன் விருதாச்சலம் ரோட்டில் சென்றபோது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கற்பகம் பேருந்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலைநகசிங்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடன் சென்ற வினித்குமார் தலையில் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என உறவினர்கள் திடீரென திரண்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது